புத்தக கண்காட்சியில் கா.நா.சு அரங்கில் என் கேள்விக்கான பதில் இந்த இரண்டு கவிதைகள்
சுதந்திரம் -- வைரமுத்து அவன் ஒரு பட்டுவேட்டியை
பற்றிய கனாவிலிருந்தபோது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப்பட்டது !
பற்றிய கனாவிலிருந்தபோது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப்பட்டது !
சுதந்திரம் - ஆத்மாநாம்
அரசாலோ தனி நபராலோ
பறிக்கப்படு மெனில்
அது என் சுதந்திரம் இல்லை
அவர்களின் சுதந்திரம்தான்
உனக்கொரு அறை
உனக்கொரு கட்டிலுண்டு
உனக்கொரு மேஜையுண்டு
உனக்குள்ளே ஒரே உரிமை
சிந்திப்பது மட்டும்தான்
மலைகளைப் பார்
மரங்களைப் பார்
பூச்செடிகளைப் பார்
ஜீவநதிகளைப் பார்
பரந்த கடலைப் பார்
இதமூட்டும்
கடற்கரையைப் பார்
எவ்வளவு இல்லை நீ பார்க்க
ஏன் அக்கசடர்களைக் குறித்து
வருந்துகிறாய்
குமுறுகிறாய்
எழுத்துக் கூட்டங்களைச் சேர்க்கிறாய்
உன் வேலை
உன் உணவு
உன் வேலைக்கு போய்வரச் சுதந்திரம்
இவற்றுக்கு மேல்
வேறென்ன வேண்டும்
சாப்பிடு தூங்கு மலங்கழி
வேலைக்குப் போ
உன் மீது ஆசை இருந்தால்
குறுக்கிடாதே
No comments:
Post a Comment