Monday, January 30, 2012

கவிதைஒளியை பிழியும் நிலா 
என்னை பிழியும் காதல்
மெல்லப் பிதுங்கும் கவிதை 


Saturday, January 28, 2012

தூங்க பிடிக்கவில்லை


நீ
நினைவு போல் 
கனவுகளில் வருவதில்லை !
கனவுகள் எனக்கு  கட்டுப்படுவதில்லை 
நீயில்லாத கனவுகளோடு 
தூங்க பிடிக்கவில்லை !

விழுவது பற்றி கவலையில்லை


விழுவது பற்றி கவலையில்லை 
நான்
பனியோ 
மழையோ 
அருவியோ 
உன் விரல் நகம் தொட 
விழுவது பற்றி கவலையில்லை 

Photo Clicked by S.Muthuvel @ Tokyo in 2003

காதலில் விழுந்தபின்எது நீ 
எது நான்
சரிவரத்  தெரியவில்லை 
தேவையுமில்லை 
காதலில் விழுந்தபின் !
Friday, January 27, 2012

நகம் வளர்வராமெல்லாம்
விரல் நகம் வளர்த்தேன் 
உனக்கென காத்திருக்கும் 
நிமிடங்களுக்காக
....
.......
..........

இந்த சுகங்கள் 
தொலைத்தேன்
செல்போன்  
வந்தபின் 
கொஞ்சம் உதவி செய்
உன் நினைவுகளால் 
என் நெஞ்சம் நுரைத்துக் கனக்கிறது 
வாய்மட்டும் வார்த்தைகள் வற்றி 
வறண்டு கிடக்கிறது 
கொஞ்சம் உதவி செய்
செவ்வாய் கொண்டு.

காதலித்துப்பார்

பவர்ணமி பிடிக்கவில்லை 
அம்மாவாசைக்காக  காத்திருக்கிறேன்  
அவள் முகத்தில் 
பொட்டு வைக்க !

Wednesday, January 25, 2012

Saturday, January 21, 2012

கடலூர் தானே கொய்யா - Kadalur Thane Guava

Not just this single fruit
Whole Kadalur 's just dirt
dry fruits can be gifts
dry trees can not be. 


       
  
    
Clicked by S.Muthuvel on Jan 2012
    

Wednesday, January 18, 2012

பக் என பற்றிய - Camphor Thoughtsபக் என பற்றிய
சில நினைவுகள் 
கண் மூடி திறக்கும்  முன் 
காற்றாய் கரைகின்றன 
Clicked  by S.Muthuvel on 2012 Pongal Day

Tuesday, January 17, 2012

BOOK FACES (FB) - மனுஷ்ய புத்திரன் வாசகர் சந்திப்பு

You don't know a thing about their lives 
They live where you wouldn't dare to drive
You shake as you think of how they sleep 
But you write as if you all lie side by side 
Reader, meet Author   
---MorrisseyThe readers,meet the Poet Manushyaputhiran  @ Chennai Book fair 2012 , S.Muthuvel  Clicked.

Monday, January 16, 2012

மனுஷ்ய புத்திரன் எடுத்துரைத்த இரண்டு கவிதைகள்புத்தக கண்காட்சியில் கா.நா.சு அரங்கில் என் கேள்விக்கான பதில் இந்த இரண்டு கவிதைகள் 

சுதந்திரம்  -வைரமுத்து 
அவன் ஒரு பட்டுவேட்டியை
பற்றிய கனாவிலிருந்தபோது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப்பட்டது !


சுதந்திரம்  - ஆத்மாநாம்
எனது சுதந்திரம்
அரசாலோ தனி நபராலோ
பறிக்கப்படு மெனில்
அது என் சுதந்திரம் இல்லை
அவர்களின் சுதந்திரம்தான்
உனக்கொரு அறை
உனக்கொரு கட்டிலுண்டு
உனக்கொரு மேஜையுண்டு
உனக்குள்ளே ஒரே உரிமை
சிந்திப்பது மட்டும்தான்
மலைகளைப் பார்
மரங்களைப் பார்
பூச்செடிகளைப் பார்
ஜீவநதிகளைப் பார்
பரந்த கடலைப் பார்
இதமூட்டும்
கடற்கரையைப் பார்
எவ்வளவு இல்லை நீ பார்க்க
ஏன் அக்கசடர்களைக் குறித்து
வருந்துகிறாய்
குமுறுகிறாய்
எழுத்துக் கூட்டங்களைச் சேர்க்கிறாய்
உன் வேலை
உன் உணவு
உன் வேலைக்கு போய்வரச் சுதந்திரம்
இவற்றுக்கு மேல்
வேறென்ன வேண்டும்
சாப்பிடு தூங்கு மலங்கழி
வேலைக்குப் போ
உன் மீது ஆசை இருந்தால்
குறுக்கிடாதே


Friday, January 13, 2012

Tuesday, January 10, 2012

விரல் வழி உலகம் - In Finger Tips


Thanks Braillie for the Touch (screen)Paper 

Taken by S.Muthuvel @ Chennai Book Fair 2012

Monday, January 9, 2012

அழிக்கப் பிறந்தவன் - யுவகிருஷ்ணா BOOK MAPIA

As reader I want to enhance the experience of the book.
CLICK THE BELOW IMAGE to  travel with Yuva's characters.


  Get the book ,you can not keep it down without completing.


 வெளியீடு - உ பதிப்பகம்
 விலை - ரூ. 50.00
 புத்தகக் கண்காட்சியில் கடை எண்; 334 டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும்.
Sunday, January 8, 2012

தெர்மக்கோல் தேவதைகள் - பின்நவீனத்துவ(குன்சான) அறிமுகம்

சுவாரசியமான சங்கர் (above)18  கதைகளீன் தொகுப்பு.


ஜன்னல்
இருவர் தோல்களீளும் கையை போட்டு "இனிமே ஜன்னலை மூடாதீங்க" என்றான்.
ஒருமாதிரி குன்சாகவேபட்டது!

காளீதாஸ்

இவன் அக்மார்க் கோடம்பாக்க டாஸ்மார்க் விளீம்புக் மனிதன்.

நேற்றுவரை
புதுமாப்பிள்ளையின் மனசாட்சி.

மகாநதி
ஆம் மகாநதி
என் கண்களிளும்

பிரியாணி
ஒரு பொட்லம் பிரியாணிய வச்சுகிட்டு நான் படரா அவஸ்த இருக்கே!


ஜெயா
எச்சி துப்புற தொட்டியா ?

ராஜலக்ஷ்மி
இவள் நான்கரை அடி உயர மகாலட்சுமி!
"பச் நீயும் நடிக்காதே சஙகர்"


இது ஒரு பின் நவீனத்துவ அறிமுகம் மட்டுமே.தெர்மக்கோல் தேவதைகள் விமர்சனம். By 
சங்கர் புத்தகங்கள் அனைத்தும் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கிறது..
தெர்மக்கோல் தேவதைகள்
விலை : ரூ.50
வெளியீடு: “உ” பதிப்பகம்
அதன் விபரங்கள் :
அரங்கு எண் : 160,161 ராஜகுமாரி பப்ளிகேஷன்ஸ்
அரங்கு எண் : 344 டிஸ்கவரி புக் பேலஸ்
அரங்கு எண் : 281,282 வனிதா பதிப்பகம்