Sunday, March 28, 2010

Moon Watch

நிலவின்
நிறம்
வெள்ளையல்ல

வெள்ளை
மட்டும்
அழகல்ல

நிறம்
கண்கள் சொல்லும்
பொய்




















Photo taken by MuthuVel Sivaraman on 28'th March 2010,
Double click on the moon to see it bigger.

Saturday, March 27, 2010

Rain










Flowers 
from
Heaven .



Place: Kanchipuram.
(No graphics done)

Thursday, March 25, 2010

மர ஓம்

மேகம் அணைக்க
மரக்கைகள் நீட்டும்
பூமி

தாவிப்பிடிக்க முடியாமல்
தவிக்கும் மரங்கள்

மனமிரங்கி
வானமிறங்கி
முத்த மழை
முழுதாய் தழுவும்

இது அறிந்தும்

மரம் வெட்டி
சந்ததிக்கும் சேர்த்து
சவப்பெட்டி செய்யும்
மனிதன்

                                                         மர ஓம்   !

Monday, March 22, 2010

புத்தன்



உன் மவுனம்

நான் புத்தன்

உன் புன்னகை

உண்மை புத்தன்

பித்தன்

மழை வாசம்

 
கான்க்ரீட் காட்டிலும்

மழை

60'ஆம் மாடிவரை

வீசும் மண்வாசம்


         இல்லை


         இது மழை வாசம்

Sunday, March 21, 2010

அசோகர் பள்ளிக்கூடம்

எங்கள் ஊரில்
மழைக்கு ஒதுங்குவதில்லை
பள்ளிக்கூடத்தில்
இருப்பது
மரத்தடி பள்ளிக்கூடமே

காதல்


உள்மூச்சுக்கும்
வெளிமூச்சுக்கும்
இடையேயே
சிறு மரணம்
காதல்



கடவுள்

செடி
புதைக்கப்பட்ட விதை

மரம்
வயதான செடி

கூடு
உடைந்த குச்சிகள்

காய்
காணாமல் போன பூ

புத்தகம்
வெட்டப்பட்ட மரம்

ஆம் மரம் கடவுள்